Thursday, March 29, 2012


மகாத்மாகாந்தி கூறிய ஏழு விதமான பண்பாட்டுக் குறைபாடுகள்

மகாத்மா காந்தி இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே தனது பேரனான அருண்காந்தியைத் தினசரி ஒருமணி நேரமாவது தம்முடனேயே வைத்திருந்து பல விடயங்களை அவருக்குப் போதிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பொழுது உலகத்தில் இருக்கக்கூடியதான சில பண்பாட்டுக் குறைபாடுகள் பற்றிக் கூறியதில் ஏழு விடயங்களைத் தம்கைப்பட எழுதி அவரிடம் கொடுத்தார். அவை பின்வருமாறு அமைந்திருந்தது

1.     உழைப்பில்லாது பெற்ற செல்வம்.
Wealth without work.
(தன் முயற்சியால் சம்பாதிக்காத செல்வத்தை ஒருவன் அநுபவிப்பதற்கு உரிமையில்லை).

2.     மனச்சாட்சிக்கு விரோதமான மகிழ்ச்சி.
                Pleasure with Conscience.
(மனம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயத்திற்கு மகிழ்ச்சியடைவதே நிலையான மகிழ்ச்சியாகும்)
               
3.     பண்பாடு இல்லாமல் பெற்றிருக்கும் அறிவு.
                Knowledge without Character.
(எவ்வளவுதான் கற்றிருந்தாலும், அறிவு பெற்றிருந்தாலும் ஒருவரிடம் நல்ல பண்பாடு இல்லையாயின் அவரால் சமூகத்திற்கு ஒரு நன்மையும் இல்லை).

4.                    நோ்மை தவறிய வாணிபம்.
Commerce without Morality.
(வியாபாரத்தில் இலாபம் வேண்டும் என்பதற்காக நேர்மை தவறின் அது வியாபார நீதி ஆகாது).

5.     மனித நேயத்திற்கு இடமளிக்காத விஞ்ஞான அறிவியல்.
                Science without Humanity.
(விஞ்ஞான வளர்ச்சி மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கே பயன்படவேண்டும், அழிவிற்கல்ல).

6.     தியாகமற்ற வழிபாடு.
                Worship without Sacrifice.
(வழிபாடு செய்வதென்றாலும் தன்னிடமிருந்து எதனையாவது தேவைப்படுமிடத்து தியாகம் செய்யச் சித்தமாயிருக்க வேண்டும்).

7.     கடமைப்பொறுப்புக்களைக் கொண்டிராமல் அநுபவிக்கும் உரிமைகள்.
                Rights without Responsibilities.
(உரிமைகளை அநுபவிப்பவர்கள் அதற்கு உரித்தான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கவேண்டும்).
நன்றி. – Thanks.

No comments:

Post a Comment